அரியானாவின் குருகிராமில் மாட்ரி வன் முன்னெடுப்பு தொடங்கப்பட்டது.
குருகிராம்-ஃபரிதாபாத் சாலையில் உள்ள ஆரவல்லி மலைப் பகுதியில் 750 ஏக்கர் பரப்பில் கருப்பொருள் அடிப்படையிலான நகர்ப்புற வனத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
இந்த முன்னெடுப்பானது டெல்லியின் தேசியத் தலைநகர்ப் பகுதியில் பல்லுயிர்ப் பெருக்கம், பொது நல்வாழ்வு மற்றும் நீடித்த நிலையான நகர்ப்புற வாழ்க்கையை ஊக்குவிக்கும் இயற்கையான அமைப்பினைப் போன்ற பசுமையானப் பகுதியினை உருவாக்கும்.
பருவநிலை நடவடிக்கையின் ஒரு முக்கியப் பகுதியாக மரங்களை நட்டு காடழிப்பைத் தடுப்பதன் மூலம் குடிமக்கள் வன் மித்ராக்களாக மாறுவதற்கு ஊக்குவிக்கப்பட்டனர்.