TNPSC Thervupettagam

மாநில அரசு ஊழியர்களுக்கான நலத்திட்ட அறிவிப்புகள்

May 1 , 2025 20 days 53 0
  • மாநில அரசின் ஊழியர்களின் பெரு நலனுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒன்பது அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.
  • முதலாவது அறிவிப்பின் கீழ் அக்டோபர் 01 ஆம் தேதி முதல் தொடங்கும் வகையில் ஈட்டப்பட்ட விடுப்பிற்கு ஈடான ஊதியம் அளிக்கும் வகையில், 15 நாட்கள் வரையில் ஈட்டப்பட்ட விடுப்பிற்கு ஊதியம் பெறலாம்.
  • 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அகவிலைப் படியை 2 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு முடிவெடுத்ததன் அடிப்படையில், மாநில அரசும் அதே தேதியிலிருந்து மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2% அதிகரித்துள்ளது.
  • தற்போது 10,000 ரூபாயாக வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ஆனது இனி 20,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
  • இந்த ஆண்டு முதல், ஊழியர்களின் குழந்தைகளின் தொழிற்கல்வி சார்  உயர்கல்வி உதவிக்கான கல்வி முன்பணம் ஆனது 1,00,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
  • கலை, அறிவியல் மற்றும் பல்தொழில்நுட்பப் படிப்புகளுக்கு, இது 50,000 ரூபாயாக அதிகரிக்கப் படும்.
  • ஐந்தாவது அறிவிப்பில், பாலினத்தை எதுவும் பொருட்படுத்தாமல் அனைத்து அரசு ஊழியர்களுக்குமான திருமண முன்பணமானது, இனி 5,00,000 ரூபாயாக அதிகரிக்கப் படும்.
  • தமிழக அரசின் ஆறாவது அறிவிப்பானது, ஓய்வு பெற்ற C & D பிரிவு ஊழியர்கள், அனைத்து வகையான தனிநபர் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதிய தாரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பண்டிகை மிகையூதியம் (போனஸ்) ஆனது 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படும்.
  • ஓய்வூதியதாரர்கள் தங்கள் குடும்பங்களுடன் பண்டிகைகளை நன்கு கொண்டாடச் செய்வதற்காக தற்போது வழங்கப் பட்டு வரும் பண்டிகை முன்பணம் ஆனது 4,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
  • அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு சார் ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவை குறித்து ஆராய்வதற்காக அமைக்கப் பட்டக் குழுவானது, இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படும்.
  • மகப்பேறு விடுப்பு ஆனது இனி தகுதி காண் பணிக் காலத்தில் சேர்க்கப்படும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்