நிதி ஆயோக் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) ஆனது மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சபைகளுக்கான முக்கிய மானிய ஆதரவைக் குறைத்து, திட்ட அடிப்படையிலான நிதிக்கு மாற வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சபைகளின் நிதி ஒதுக்கீடுகளில் மத்திய நிதி ஒரு மிகச் சிறிய பங்கினையே கொண்டுள்ளதோடு இதற்கு எடுத்துக்காட்டாக, குஜராத் மாநில அரசானது மத்திய அரசிடமிருந்து 1.07 கோடி ரூபாயை மட்டுமே பெறுகிறது என்ற நிலையில் கேரள மாநில அரசு எந்த நிதியையும் பெறுவதில்லை.
மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் சபைகளுக்கான நிதியானது சுமார் 17.65% என்ற அளவில் அதிகரித்துள்ளது, ஆனால் சிக்கிம், தமிழ்நாடு மற்றும் உத்தரகாண்ட் போன்ற சில மாநிலங்கள் நிதி ஒதுக்கீடுகளில் சரிவினைச் சந்தித்தன.