TNPSC Thervupettagam

மாநில அளவிலான வழிகாட்டுதல் குழு - HRH உத்தி

February 27 , 2026 18 days 125 0
  • சுகாதாரத்திற்கான விரிவான மனித வள (HRH) உத்தியை உருவாக்க தமிழ்நாடு அரசு ஒரு மாநில அளவிலான வழிகாட்டுதல் குழுவை அமைத்துள்ளது.
  • இந்த முயற்சி உலக வங்கி ஆதரவுடன் மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவை வழங்கல் திட்டத்தின் (EHSDP) கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமை தாங்கும் இந்தக் குழுவிற்கு தேசிய சுகாதாரத் திட்டத்தின் (NHM) தமிழ்நாடு திட்ட இயக்குநர், உறுப்பினர் செயலாளராகப் பணியாற்றுகிறார் என்பதோடு இந்தக் குழுவில் 16 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • EHSDP, உலக வங்கியின் முடிவுகளுக்கான திட்ட (Program-for-Results) மாதிரியைப் பின்பற்றுகிறது என்பதோடு இதில் நிதியானது விநியோகத்துடன்-இணைக்கப்பட்ட குறிகாட்டிகள் (DLIs) அடிப்படையில் விடுவிக்கப்படுகிறது.
  • பொது சுகாதார வசதிகளில் ஆட்சேர்ப்பு, திறன் மேம்பாடு, பணியாளர் பரவல் மற்றும் தக்க வைப்பு ஆகியவற்றில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிவதே HRH உத்தியின் நோக்கமாகும்.
  • வழிகாட்டுதல் குழு, நிதி, கல்வி, தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு மற்றும் சட்டம் போன்ற துறைகளுக்கு இடையே ஒட்டுமொத்த வழிகாட்டுதலை வழங்குவதோடு, அவற்றைத் திறம்பட செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பையும் உறுதி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்