TNPSC Thervupettagam

மாநில ஆற்றல் திறன் குறியீடு (SEI) 2021-22

April 16 , 2023 842 days 373 0
  • 2021-22 ஆம் ஆண்டிற்கான மாநில ஆற்றல் திறன் குறியீட்டு (SEI) அறிக்கையை மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்  வெளியிட்டு உள்ளது.
  • இது 2020-21 மற்றும் 2021-22 நிதியாண்டுக்கான ஆற்றல் திறன் செயல்படுத்தல் மீதான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வருடாந்திர முன்னேற்றம் பற்றிய ஒரு அறிக்கை ஆகும்.
  • இந்த   அறிக்கையானது மிகை ஆற்றல் திறன் பொருளாதாரக் கூட்டணி (AEEE) உடன் இணைந்து ஆற்றல் திறன் பணியகத்தால் (BEE) உருவாக்கப்பட்டது.
  • இது மேம்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்புடன்  சீரமைக்கப்பட்ட 50 குறிகாட்டிகளைக்  கொண்டுள்ளது.
  • ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள்  முன்னணிப்  பிரிவில் (>60 புள்ளிகள்) உள்ளது.
  • அசாம், ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் சாதனையாளர் பிரிவில் (50-60 புள்ளிகள்) உள்ளது.
  • கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், அசாம் மற்றும் சண்டிகர் ஆகியவை அந்தந்த மாநிலக் குழுக்களில் சிறந்து விளங்கும் மாநிலங்களாக திகழ்கிறது.
  • தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் கடந்த வருட நிலையை விட அதிக அளவில் முன்னேற்றம் அடைந்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்