TNPSC Thervupettagam

மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீடு

June 11 , 2019 2251 days 1125 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையமானது (Food Safety and Standards Authority of India - FSSAI) முதலாவது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டை உருவாக்கியுள்ளது.
  • இந்தக் குறியீட்டில் சண்டிகர் முதலிடத்தில் உள்ளது.
  • உலக உணவுப் பாதுகாப்பு தினக் கொண்டாட்டத்தின் போது FSSAI-யினால் தொடங்கப்பட்ட இதர முன்னெடுப்புகள் பின்வருமாறு
    • ராமன் 1.0 - கொழுப்புகள், நெய் மற்றும் சாப்பிடக் கூடிய எண்ணெய் ஆகியவற்றில் கலப்படத்தினை விரைவாகக் (ஒரு நிமிடத்திற்குக் குறைவாக) கண்டறியும் பணியினை மேற்கொள்ளும் பேட்டரியின் உதவியுடன் கையினால் இயக்கப்படக் கூடிய ஒரு சாதனம்.
    • உணவுப் பாதுகாப்பு மாயப் பெட்டி – உணவுக் கலப்படத்தினைச் சோதனை செய்வதற்காக கையேடு மற்றும் சோதனைப் பொருளைக் கொண்டிருக்கும் நபர்கள் அவர்களாகவே சோதனை செய்யப்படக் கூடிய உணவுப் பரிசோதனைப் பெட்டி.
    • சரியான உணவு உண்ணும் விருதுகள் – பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதற்கு குடிமக்களுக்கு அதிகாரமளிப்பதற்காக உணவு நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகளை அங்கீகரிப்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்