TNPSC Thervupettagam

மாநில எரிசக்தி திறன் குறியீடு 2024

September 4 , 2025 18 days 60 0
  • எரிசக்தி திறன் வாரியம் (BEE) ஆனது, ஆற்றல் திறன் கொண்ட பொருளாதாரத்திற்கான கூட்டணியுடன் (AEEE) இணைந்து 2024 ஆம் ஆண்டு ஆற்றல் திறன் குறியீட்டை (SEEI) வெளியிட்டது.
  • இந்தக் குறியீடு ஆனது 2023–24 ஆம் நிதியாண்டிற்கான 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் ஆற்றல்சார் செயல்திறனை மதிப்பிடுகிறது.
  • மொத்த ஆற்றல் நுகர்வு (MToE) சார்ந்து மாநிலங்கள் தொகுக்கப்பட்டு, முன்னணி, சாதனை படைத்தவை, போட்டி வாய்ந்தவை மற்றும் இலட்சியமிக்கவை என்ற நான்கு பிரிவுகளின் கீழ் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
  • அந்தந்த குழுக்களில் சிறந்த செயல்திறன் கொண்டவை மகாராஷ்டிரா (>15 MToE), ஆந்திரப் பிரதேசம் (5–15 MToE), அசாம் (1–5 MToE) மற்றும் திரிபுரா (<1 MToE) ஆகியனவாகும்.
  • SEEI 2024 ஆனது தரவு சார்ந்த கொள்கை, மாநிலங்களுக்கு இடையேயான கற்றல் மற்றும் 2070 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் நிகரச் சுழி உமிழ்வு நிலையை அடைதல் இலக்கு ஆகியவற்றினை ஆதரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்