TNPSC Thervupettagam

மாநில டிஜிபி (DGP) நியமனத்திற்கான புதிய விதிகள்

March 18 , 2026 3 days 72 0
  • மாநிலக் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) நியமனத்திற்கான விதிகளை ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) மாற்றியமைத்துள்ளது.
  • டிஜிபி தேர்வுப் பட்டியலுக்குத் தகுதியான அதிகாரிகளின் பெயர்களை அனுப்புவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், மாநிலங்கள் இனி இந்திய உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும்.
  • தற்போதைய டிஜிபி ஓய்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பே மாநிலங்கள் UPSC-க்கு முன்மொழிவுகளை அனுப்ப வேண்டும்.
  • காவல்துறை சீர்திருத்தங்கள் மற்றும் டிஜிபி நியமனங்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்கிய 'பிரகாஷ் சிங் Vs இந்திய ஒன்றியம் வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து இந்த விதிமுறை வந்துள்ளது.
  • "பொறுப்பு டிஜிபி" என்ற பதவி என எதுவும் கிடையாது என்றும், மாநிலங்கள் வழக்கமான டிஜிபியையே நியமிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது.
  • UPSC மூன்று மூத்த IPS அதிகாரிகளைக் கொண்ட குழுவைத் தயாரிக்கும், அதிலிருந்து மாநில அரசு டிஜிபியைத் தேர்ந்தெடுக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்