TNPSC Thervupettagam

மாநில நிதி குறித்த அறிக்கை 2023-24

January 10 , 2026 13 days 68 0
  • இந்தியத் தலைமை கணக்காளர் (CAG) இரண்டாவது மாநில நிதி குறித்த அறிக்கை 2023-24’ என்ற அறிக்கையை வெளியிட்டார்.
  • 2023-24 ஆம் நிதியாண்டிற்கான 28 மாநிலங்களின் நிதி நிலை குறித்த கண்ணோட்டத்தை இந்த அறிக்கை முன் வைக்கிறது.
  • 67.87 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மாநிலங்களின் பொதுக் கடன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) சுமார் 23% ஆகும்.
  • 15வது நிதி ஆணையம் பரிந்துரைத்த, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3% என்ற நிதிப் பற்றாக்குறை அளவுருவினைப் பதினெட்டு மாநிலங்கள் கடந்துள்ளன.
  • சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டிக்கான வருவாய்ச் செலவினம் மொத்த வருவாய்ச் செலவினத்தில் சுமார் 60% ஆகும்.
  • மத்திய வரிப் பகிர்வைச் சார்ந்திருப்பது 2014-15 ஆம் ஆண்டில் ~21 சதவீதத்திலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் ~30% ஆக உயர்ந்தது.
  • வருவாய்ச் செலவினத்தில் மூலதனச் செலவு சுமார் 16% ஆகக் குறைவாகவே இருந்தது அதே நேரத்தில் வருவாய்ச் செலவு 83% ஆக அதிகமாக இருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்