TNPSC Thervupettagam

மாநில நுண்ணுயிரி - பேசிலஸ் சப்டிலிஸ்

January 28 , 2026 3 days 59 0
  • கேரளா தனது மாநில நுண்ணுயிரியாக பேசிலஸ் சப்டிலிஸை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதுடன் ஒரு நுண்ணுயிரியலுக்கான சிறப்பு மையத்தையும் (CoEM) மாநிலத்திற்கு அர்ப்பணித்துள்ளது.
  • இந்தியாவில் மாநில நுண்ணுயிரியை அறிவித்த முதல் மாநிலம் கேரளா ஆகும்.
  • பேசிலஸ் சப்டிலிஸ் என்பது மனித குடல், சுற்றுச்சூழல் மற்றும் நொதிக்கப்பட்ட உணவுகளில் காணப்படும் ஒரு புரோபயாடிக் பாக்டீரியம் ஆகும்.
  • இது மரபணு ரீதியாக திறமையான வெப்பத்தை தாங்கும் வித்திகளை உருவாக்குகிறது என்பதோடு நுண்ணுயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தில் ஒரு மாதிரி உயிரினமாகவும் செயல்படுகிறது.
  • அதன் முழுமையாக வரிசைப்படுத்தப்பட்ட மரபணுத் தொகுப்பானது தொழில்துறை உயிரித் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகிறது.
  • இது குடல் ஆரோக்கியத்தை மிக நன்கு பேணி, குடல் கட்டுப்படுத்தும் அமைப்புகளை வலுப்படுத்துகிறது என்பதோடு தீங்கு விளைவிக்கும் நோய்க் கிருமிகளையும் தடுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்