TNPSC Thervupettagam

மாநில மின்சாரப் பரிமாற்ற அறிக்கை 2026

March 1 , 2026 12 days 68 0
  • எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனம் (IEEFA) மற்றும் Ember ஆகியவற்றின் புதிய அறிக்கை, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை மின்சார வாகன (EV) ஏற்பு மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஊக்குவிப்பதில் முன்னணியில் உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது.
  • இந்தியாவின் மின்சாரத் தேவையில் 95% பங்களிக்கும் 21 மாநிலங்களை இந்த அறிக்கை மதிப்பாய்வு செய்தது.
  • 2025 ஆம் நிதியாண்டில் 10% மின்சார வாகன ஏற்பை கொண்ட உத்தரப் பிரதேசம் 2027 ஆம் நிதியாண்டிற்குள் 22 GW சூரிய மின்சாரத் திறனையும் 2028 ஆம் ஆண்டுக்குள் 1 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜனையும் இலக்காகக் கொண்டது.
  • ஆந்திரப் பிரதேசம் 6.2% மின்சார வாகன ஏற்பை கொண்டுள்ளது என்பதோடு 2024 இல் ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கையை அது அறிமுகப்படுத்தியது என்ற நிலையில் மேலும் 1,440 மெகாவாட் நீரேற்றம் மூலம் செய்யப்படும் நீர் மின் சேமிப்பு திறனைக் கொண்டுள்ளது.
  • ராஜஸ்தான் 6.6% மின்சார வாகன ஏற்பைப் பதிவு செய்துள்ளது மற்றும் மூன்று மாநிலங்களில் மிகக் குறைந்த பசுமை கட்டண வீதத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்