இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான டாக்டர் ஜெய்சங்கர் மாநிலங்களவையின் உறுப்பினராக பதவிப் பிரமாணம் எடுத்தார்.
இவர் குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் உறுப்பினராவதற்குரிய தகுதி நிலைகள் இந்திய அரசியலமைப்பின் 84-வது விதியில் கூறப்பட்டுள்ளன.
1977வது ஆண்டைச் சேர்ந்த இந்திய அயல்நாட்டுப் பணி அதிகாரியான சுப்பிரமணியம் ஜெய்சங்கர் 2017 ஆம் ஆண்டில் சீனாவுடன் ஏற்பட்ட டோக்லாம் மோதல்களுக்குத் தீர்வு காண்பதில் முக்கியப் பங்காற்றினார்.
மேலும் இவர் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தமான அணு ஆயுத ஒப்பந்தம் குறித்த சமரசப் பேச்சுவார்த்தையிலும் பங்கு கொண்டிருந்தார்.