மாநிலங்களால் பயன்படுத்தப்படும் SDRF–ன் வரம்பு அதிகரிப்பு
October 1 , 2020 1771 days 764 0
இந்தியப் பிரதமர் ஏழு மாநிலங்களுக்கு மாநிலப் பேரிடர் மீட்பு நிதியின் (SDRF - State Disaster Response Fund) பயன்பாட்டு வரம்பை 35% என்ற அளவிலிருந்து 50% ஆக அதிகரிக்கப் படுவதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு, பஞ்சாப், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தில்லி, உத்தரப் பிரதேசம் ஆகியவை அந்த 7 மாநிலங்களாகும்.
இது கோவிட் – 19 தொடர்பான கட்டமைப்புகளை மேம்படுத்த அந்த மாநிலங்களுக்கு உதவ இருக்கின்றது.
கோவிட் – 19 நோய்த் தொற்றின் 63%ற்கும் மேற்பட்ட பாதிப்புகள் இந்த 7 மாநிலங்களில் நிகழ்கின்றன.
SDRF
இது 13வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் பேரிடர் மேலாண்மை ச் சட்டம், 2005 என்ற சட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டுள்ளது.
இந்திய அரசானது வருடாந்திர அடிப்படையில் மாநிலங்களுக்கு SDRF-ன் ஒரு பகுதியாக 75% நிதியை அளிக்கின்றது.
மத்திய அரசானது சிறப்புப் பிரிவு மாநிலங்களுக்கு 90% நிதியை அளிக்கின்றது.
இது ஒவ்வொரு ஆண்டும் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப் படுகின்றது.