மாநிலங்களின் நிதிநிலை அறிக்கைக் கணக்கின் வரவு சாராக் கடன்கள்
August 22 , 2025 17 hrs 0 min 43 0
2024 ஆம் நிதியாண்டில் 21,251 கோடி ரூபாயாக இருந்த நிதிநிலை அறிக்கைக் கணக்கின் வரவு சாராக் கடன்கள் (OBB) 2025 ஆம் நிதியாண்டில் 29,335 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், 2021 ஆம் நிதியாண்டில் நிதிநிலை அறிக்கைக் கணக்கின் வரவு சாராக் கடன்கள் 67,181 கோடி ரூபாயாக உயர்ந்தன.
2023 ஆம் நிதியாண்டில் இருந்து மத்திய அரசு அதன் சொந்த நிதிநிலை அறிக்கைக் கணக்கின் வரவு சாராக் கடன் வாங்கும் நடைமுறைகளை நிறுத்தியது.
மத்திய அரசு ஆனது 2022 ஆம் நிதியாண்டு முதல், 293(3) சரத்தின் கடன் வரம்புகளின் கீழ் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களால் திரட்டப்பட்ட கடனைச் சேர்த்துள்ளது.
50 ஆண்டு வட்டி இல்லாத கடன்களை வழங்கும் மத்திய அரசின் மூலதன முதலீட்டுக்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவி (SASCI) திட்டத்தை மாநிலங்கள் தேர்வு செய்கின்றன.
13 முக்கிய மாநிலங்களின் நிதிநிலை அறிக்கைகள் 2026 ஆம் நிதியாண்டில் 3.2% நிதிப் பற்றாக்குறை இருக்கும் என்று கணிக்கின்றன என்று கேர்எட்ஜ் மதிப்பீடுகள் அறிக்கை கூறுகிறது.
2025 ஆம் நிதியாண்டில் மகாராஷ்டிரா 13,990 கோடி ரூபாய் என்ற அளவில் நிதிநிலை அறிக்கைக் கணக்கின் வரவு சாராக் கடன்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது அதைத் தொடர்ந்து 5,438 கோடி ரூபாயுடன் கர்நாடகா உள்ளது.
தெலுங்கானா மற்றும் கேரளா ஆகியவை முறையே 2025 ஆம் நிதியாண்டில் 2,697 கோடி ரூபாய் மற்றும் 983 கோடி ரூபாய் அளவிலான நிதிநிலை அறிக்கைக் கணக்கின் வரவு சாராக் கடன்களை கொண்டுள்ளன.
2024 ஆம் நிதியாண்டில், மகாராஷ்டிராவில் 7,700 கோடி ரூபாய் என்ற அளவில் நிதி நிலை அறிக்கைக் கணக்கின் வரவு சாராக் கடன்கள் இருந்தன அதைத் தொடர்ந்து கேரளா 4,688 கோடி ரூபாய் என்ற அளவில் கொண்டிருந்தது.
மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் மத்திய அரசின் நிதிப் பரிமாற்றங்களைப் பெரிதும் சார்ந்துள்ளன.
ஹரியானா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா போன்ற செல்வ வளம் மிக்க மாநிலங்கள் தங்கள் வருவாய் மூலம் பெரும்பாலான நிதி ஒதுக்கீடுகளுக்கு நிதியளிக்கின்றன.
மாநில அரசுகள் ஆனது, நிதிப் பற்றாக்குறை இலக்குகளை மீறாமல் நலத் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கு நிதியளிக்க நிதிநிலை அறிக்கைக் கணக்கின் வரவு சாராக் கடன்களைப் பயன்படுத்துகின்றன.
2025 ஆம் நிதியாண்டில் திறந்த சந்தை ஆதாரங்கள் மூலம் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகியவை தலா 1.2 லட்சம் கோடி ரூபாக்கு மேல் கடன் வாங்கியுள்ளன.