மாநிலங்களுக்கான செயல்திறன் தரக் குறியீடு (PGI) 2.0 அறிக்கை
July 15 , 2026 12 days 155 0
பள்ளி கல்வியில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் (UTs) செயல்திறனை மதிப்பிடுவதற்காக மத்திய கல்வி அமைச்சகம் மாநிலங்களுக்கான செயல்திறன் தரக் குறியீடு (PGI) 2.0 அறிக்கையை 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்காக வெளியிட்டுள்ளது.
மாநிலங்களுக்கான செயல்திறன் தரக் குறியீடு (PGI) 2017 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது என்பதுடன் மேலும் இது தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (SDGs) சீரமைப்பதற்காக 2021 ஆம் ஆண்டு PGI 2.0 என மாற்றியமைக்கப்பட்டது.
PGI 2.0 ஆனது 2 பிரிவுகள் மற்றும் 6 களங்களின் கீழ் உள்ள 73 குறிகாட்டிகளைப் பயன்படுத்தி பள்ளி கல்வியை மதிப்பிடுவதுடன் இதன் மதிப்பெண்கள் 1,000 புள்ளிகளுக்கு கணக்கிடப்பட்டு, 'தக்ஸ்' (மிக உயர்ந்தது) முதல் 'அகான்ஷி-3' (மிகக் குறைந்தது) வரை 10 செயல்திறன் நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டிற்கு, சண்டிகர் 703 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது, அதைத் தொடர்ந்து பஞ்சாப் (631.1) மற்றும் டெல்லி (623.7) ஆகியவையும், மேகாலயா 417.9 புள்ளிகளுடன் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த மதிப்பீடானது தேசிய சாதனைக் கணக்கெடுப்பு (NAS) 2021, ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வித் தகவல் முறைமை பிளஸ் (UDISE+) மற்றும் பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மான் (PM-POSHAN) திட்டம் ஆகியவற்றின் தரவுகளைப் பயன்படுத்துகிறது.