TNPSC Thervupettagam

மாநிலங்களுக்கான பேரிடர் தணிப்பு திட்டங்கள்

October 6 , 2025 13 days 47 0
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமையிலான உயர்மட்டக் குழுவானது, ஒன்பது மாநிலங்களுக்கு 4645.60 கோடி ரூபாய் மதிப்புள்ள தணிப்பு, மீட்பு மற்றும் மறு கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதில் அசாம், கேரளா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, இராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை அடங்கும்.
  • அசாமில் ஈரநிலங்களை மீட்டெடுப்பதற்காகவும், அவற்றைப் புத்துயிர் பெறச் செய்வதற்காகவும் 692.05 கோடி ரூபாய் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • இது பிரம்மபுத்ரா நதி அமைப்பில் வெள்ளப் பாதிப்பிற்கான தாங்கும் தன்மையை மேம்படுத்துவதையும் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2444.42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்ட நகர்ப்புற வெள்ள அபாய மேலாண்மைத் திட்டத்தின் இரண்டாம் கட்டமானது, நகர்ப்புற வெள்ளப் பாதிப்பினால் பாதிக்கப்படக்கூடிய 11 நகரங்களுக்குப் பயனளிக்கும்.
  • அசாம் மாநிலத்திற்கு 1270.79 கோடி ரூபாய் நிதி உதவி மற்றும் 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்குப் பிறகு கேரளாவிற்கு முறையே 260.56 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
  • 2025-26 ஆம் ஆண்டிற்கு, மாநிலப் பேரிடர் மீட்பு நிதியத்திற்கான (SDRF) மத்திய அரசினுடைய பங்கின் இரண்டாவது தவணையாக 24.40 கோடி ரூபாயை முன்கூட்டியே வழங்கவும் இந்தக் குழு ஒப்புதல் அளித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்