மாநிலங்களுக்கிடையிலான சிவிங்கிப் புலிகள் வளங்காப்பு வழித்தடம்
May 7 , 2025 199 days 205 0
இராஜஸ்தான் மாநிலமானது, தற்போது மத்தியப் பிரதேசத்தில் செயல்பாட்டில் உள்ள இந்தியாவின் முதல் சிவிங்கிப் புலிகள் மறு அறிமுகத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாற உள்ளது.
இது 17,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான ஒரு வனவிலங்கு வழித் தடமாகும்.
இரு மாநிலங்களிலும் உருவாக்கப்பட உள்ள இது சிவிங்கிப் புலிகள் பாதுகாக்கப்பட்ட மற்றும் இணைக்கப்பட்ட வாழ்விடத்தில் சுதந்திரமாக சுற்றித் திரிய வழி வகுக்கிறது.
இந்த வழித்தடம் ஆனது, மத்தியப் பிரதேசத்தில் உள்ள பால்பூர் குனோ தேசியப் பூங்கா மற்றும் காந்தி சாகர் சரணாலயத்தினை இராஜஸ்தானில் உள்ள முகுந்தரா மலைகள் புலிகள் வளங்காப்பகத்துடன் இணைக்கும்.