நிதி அமைச்சகம் மே 11 அன்று கோவிட் -19 நோய்ப் பரவல் மற்றும் அதற்கான சிகிச்சைக்கு எதிராக போராட வேண்டி 14 மாநிலங்களுக்கு 6,195 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
இந்த மானியத்தை 15வது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு இந்த மானியம் உதவும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மாநிலங்களுக்கு ஏற்படும் எந்தவொரு இழப்பையும் ஈடு செய்ய மைய அரசிடமிருந்து வழங்கப்படும் ஒரு மானியமாக நிதி ஆணையத்தால் வழங்கப்படும் ஒரு முறையே இந்த மானியமாகும்.
கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் மானிய உதவியினையடுத்து நிதி ஆணையத்தின் இரண்டாவது மிகப்பெரிய உதவியாக இந்த மானியம் அமைகின்றது.