TNPSC Thervupettagam

மாநிலச் சட்டமன்றங்களின் செயல்திறன் குறித்த அறிக்கை 2024

May 22 , 2025 19 days 63 0
  • இந்தியாவின் மாநில சட்டமன்றங்களானது சராசரியாக 30 நாட்களுக்கும் மிகக் குறைவாகவே கூடுகின்றன.
  • 2017 ஆம் ஆண்டில் சராசரியாக 28 நாட்கள் சட்டமன்றங்கள் கூடின.
  • பெருந்தொற்று ஏற்பட்ட 2020 ஆம் ஆண்டில் சட்டமன்றங்களின் அமர்வு நாட்களின் எண்ணிக்கை 16 ஆகக் குறைந்துள்ளது.
  • அப்போதிருந்து, இது ஆண்டிற்கு 20 நாட்கள் என்ற எண்ணிக்கைக்கு அருகிலேயே உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் ஒவ்வோர் அமர்வின் சராசரி கால அளவு 5 மணிநேரம் ஆகும்.
  • ஒடிசா மாநிலச் சட்ட மன்றமானது, அதிக நாட்கள் (42 நாட்கள்) கூடியது அதைத் தொடர்ந்து கேரளா (38) மாநில சட்டமன்றம் உள்ளது.
  • பெரிய மாநிலங்களில், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் மாநிலச் சட்டமன்றங்கள் தலா 16 நாட்கள் கூடின.
  • 2024 ஆம் ஆண்டில், மாநிலச் சட்டமன்றங்கள் சராசரியாக ஏழு நாட்களுக்கு நிதிநிலை ஒதுக்கீடுகள் குறித்து விவாதித்தன.
  • 2017 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், கேரள சட்ட மன்றம் சராசரியாக 44 நாட்களும், அதைத் தொடர்ந்து ஒடிசா (40) மற்றும் கர்நாடகா (34) ஆகிய மாநிலச் சட்டமன்றங்களும் கூடின.
  • அரசியலமைப்பின் 178வது சரத்து ஆனது, சட்டமன்றங்கள் சபாநாயகராகவும் துணை சபாநாயகராகவும் இரண்டு உறுப்பினர்களை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுகிறது.
  • இருப்பினும், ஜார்க்கண்ட் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வாறு ஒரு அவைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கவில்லை.
  • கூடுதாக, 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மக்களவைக்கும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
  • மசோதாக்களைப் பொறுத்தவரையில், கடந்த ஆண்டில் மாநிலச் சட்டமன்றங்கள் சராசரியாக 17 மசோதாக்களை நிறைவேற்றின.
  • நிறைவேற்றப்பட்ட 500க்கும் மேற்பட்ட மசோதாக்களில், கர்நாடகா அதிகபட்சமான (49) மசோதாக்களை நிறைவேற்றியது, அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (45) அதிக மசோதாக்களை நிறைவேற்றியது.
  • டெல்லி ஒரு மசோதாவை மட்டுமே நிறைவேற்றியுள்ளது அதைத் தொடர்ந்து இராஜஸ்தான் 2 மசோதாக்களை நிறைவேற்றியது.
  • நிறைவேற்றப்பட்ட அனைத்து மசோதாக்களில் ஐம்பத்தொரு சதவீதம் அல்லது சுமார் 250க்கும் மேற்பட்டவை அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நாளுக்குள் நிறைவேற்றப்பட்டன.
  • எட்டு மாநிலச் சட்ட மன்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நாளுக்குள் அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்றின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்