மாநிலச் சட்டமன்றங்கள் லாட்டரிகள் மீது வரி விதிப்பு
March 28 , 2022 1239 days 529 0
இந்திய அரசு, மாநிலங்கள் அல்லது ஒரு மாநிலத்தால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் லாட்டரி முறையானது பந்தயம் மற்றும் சூதாட்டம் என்ற பெயருக்குள் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
எனவே, லாட்டரி முறை மீது வரி விதிக்கும் தகுதி மாநிலச் சட்டமன்றத்திற்கு உள்ளது.
இந்திய அரசு அல்லது எந்தவொரு மாநில அரசு அல்லது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் வேறு ஒரு முகமை அல்லது துணை நிறுவனம் மூலம் நடத்தப்படும் சூதாட்டத்திற்கு மட்டுமல்ல, மாநிலத்திற்குள் ஒரு தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் லாட்டரி முறைக்கும் இது பொருந்தும்.