TNPSC Thervupettagam

தேசிய ஜவுளித் துறை அமைச்சர்கள் மாநாடு 2026

January 12 , 2026 11 days 35 0
  • இந்த மாநாடு அசாம் அரசின் ஒத்துழைப்புடன் ஜவுளித் துறை அமைச்சகத்தால் குவஹாத்தியில் நடத்தப்பட்டது.
  • இந்த மாநாட்டின் நோக்கம், இந்தியாவின் ஜவுளித் துறையை வலுப்படுத்துவது, ஏற்றுமதியை அதிகரிப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பது, பாரம்பரிய ஜவுளிகளைப் பாதுகாப்பது மற்றும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு உலகளாவிய ஜவுளி மையமாக மாற்றுவது ஆகியவை ஆகும்.
  • இம்மாநாட்டின் கருப்பொருள் “இந்தியாவின் ஜவுளித் துறை: வளர்ச்சி, பாரம்பரியம் மற்றும் புத்தாக்கத்தை நெய்தல்” என்பதாகும்.
  • இது ஏற்றுமதியை அதிகரித்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களைப் பாதுகாத்தல், தொழில்நுட்ப மற்றும் நவீன கால இழைகளை ஊக்குவித்தல் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆடைப் பூங்காக்கள் (PM MITRA) மற்றும் ஒருங்கிணைந்த மதிப்புச் சங்கிலி மேம்பாடு போன்ற முதன்மைத் திட்டங்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
  • இந்த பிரத்யேக மாநாடானது, வடகிழக்கு பிராந்தியத்தின் ஜவுளித் திறன்கள், எரி, முகா மற்றும் மல்பெரி பட்டு வகைகள், பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சந்தை அணுகல் உள்ளிட்டவை குறித்து ஆராய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்