TNPSC Thervupettagam

மாபெரும் பசுமைச் சுவர் முன்னெடுப்பு

October 30 , 2025 16 hrs 0 min 27 0
  • ஆந்திரப் பிரதேச மாநிலமானது, அதன் 1,053 கிலோமீட்டர் நீள கடற்கரையில் 32% பரப்பானது தீவிரமாக அரிக்கப்பட்டு வருவதுடன் கடுமையான கடலோர அரிப்பை எதிர்கொள்கிறது.
  • சுற்றுச்சூழல், வனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது புயல் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களைக் குறைப்பதற்காக வேண்டி மாபெரும் பசுமைச் சுவர் முன்னெடுப்பு /கிரேட் கிரீன் வால் (GGW) திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • ஐந்து கிலோமீட்டர் பரப்பளவில் நிறுவப்பட உள்ள இந்த GGW, சதுப்புநிலங்கள், காற்றுத் தடைத் தோட்டங்கள், நிலப்பரப்புத் தாவரங்கள் மற்றும் மணல் திட்டுகளைக் கொண்டிருக்கும்.
  • இது பல்லுயிர்ப்பெருக்கம், பருவநிலை மீள்தன்மை மற்றும் நிலையான வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் அதே வேளையில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான கடலோர குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கிருஷ்ணா மற்றும் கோதாவரி கழிமுகங்கள் போன்ற பாதிக்கப்படக் கூடிய பகுதிகளை இலக்காகக் கொண்டு 100,000 ஹெக்டேர் அளவிலான பசுமைப் பரப்பினை மீட்டெடுக்க இந்தத் திட்டம் திட்டமிட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்