அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) ஆனது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) மற்றும் கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து, மாபெரும் மருத்துவத் தொழில்நுட்பத் திட்டத்தினை (மஹா மெட்டெக் மிஷன்) அறிமுகப் படுத்தி உள்ளது.
இந்த முன்னெடுப்பானது, இந்தியாவின் மருத்துவத் தொழில்நுட்பத் துறையில் புதுமைகளை விரைவுபடுத்துவதையும் அதிக செலவிலான இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டம் மருத்துவச் சாதனங்கள், உள்ளக நோயறிதல்கள் நுட்பங்கள், உள் வைப்பு அறுவை சிகிச்சைகள், அறுவை சிகிச்சை மற்றும் உதவி சாதனங்கள், நுகர்பொருட்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு / இயந்திரக் கற்றல் (AI/ML) மூலம் இயக்கப்பட்ட மற்றும் ரோபோ தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது.
இது காசநோய், புற்றுநோய், பச்சிளம் குழந்தை பராமரிப்பு மற்றும் ஆரம்ப சுகாதாரம் போன்ற தேசிய சுகாதார முன்னுரிமைகளை நிவர்த்தி செய்யும் திட்டங்களை ஆதரிக்கிறது.