TNPSC Thervupettagam

மாபெரும் மின்னல் ஒளிர்வு

August 11 , 2025 15 hrs 0 min 12 0
  • 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், டெக்சாஸ் முதல் கன்சாஸ் வரையிலான பகுதிகளில் வானத்தை ஒளிரச் செய்த ஒரு பெரிய மின்னல் உலகின் மிக நீளமான மின்னல் ஒளிர்வாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • இது வட அமெரிக்காவின் மாபெரும் சமவெளிகளில் 829 கிலோமீட்டர் (515 மைல்) வரை நீண்டுள்ளது.
  • இந்த மின்னல் ஆனது, மேகங்களிலிருந்து நிலத்திற்கு கடத்தப்படும் நூற்றுக் கணக்கான மின்னூட்டங்களை உருவாக்கக்கூடிய தொடர்ச்சியான நீண்ட கிடைமட்ட மின்னல் நிகழ்வாகும்.
  • இது போன்ற முந்தையப் பதிவானது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தெற்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோ வளைகுடா பகுதிகளில் 477 மைல்கள் வரையில் ஏற்பட்டது.
  • 2017 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மாபெரும் மின்னல் நிகழ்வு ஆனது, 7 வினாடிகளுக்கு மேல் நீடித்தது, அதே நேரத்தில் மிக நீண்ட கால மின்னல் நிகழ்வு பதிவு 2020 ஆம் ஆண்டில் அர்ஜென்டினா மற்றும் உருகுவே பகுதியில் சுமார் 17 வினாடிகள் நீடித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்