மாபெரும் விண்வெளி தொலைநோக்கி – ரஷ்யா
March 20 , 2021
1517 days
773
- தெற்கு சைபீரியாவில் உள்ள பைக்கால் ஏரியில் ஒரு மாபெரும் தொலைநோக்கியினை ரஷ்யா அமைத்துள்ளது.
- இது பேரண்டத்தில் உள்ள புலப்படும் நுண் பொருட்களை (துகள்களை) கண்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
- பைக்கால் – கைகடோன் வால்யூம் டிடக்டர் எனும் தொலைநோக்கி (Baika – Gigaton Volume Detector) நியூட்ரினோக்களைக் கண்டறிவதற்காக வடிவமைக்கப்பட்டது ஆகும்.
- நியூட்ரினோக்கள், கிட்டத்தட்ட நிறையற்ற, மின்னூட்டமற்ற துணைநிலை அணுத் துகள்கள் ஆகும்.
- பைக்கால் ஏரியானது புவியில் உள்ள ஆழமான மற்றும் மிகப்பெரிய நன்னீர் ஏரி ஆகும்.
Post Views:
773