2022 ஆம் ஆண்டுக்குள் தொழில்துறையில் இருந்து செயற்கை முறையிலான மாறு பக்க கொழுப்பு அற்ற இந்தியாவாக மாறுவதற்கான சரியான பாதையில் இந்தியா செயலாற்றி வருகிறது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் ஆய்வில் இது கூறப் பட்டுள்ளது.
மாறுபக்க கொழுப்பு
இவ்வகை கொழுப்பானது மிக மோசமான கொழுப்பாகக் கருதப்படுகிறது.
மற்ற உணவு சார்ந்த கொழுப்புகளைப் போலல்லாமல், மாறுபக்க கொழுப்பு (அ) மாறுபக்க கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பை அதிகரித்து நல்ல கொழுப்பின் அளவைக் குறைக்கின்றன.
மாறுபக்க கொழுப்புடைய உணவு முறை இருதய நோய் மீதான பாதிப்பினை அதிகரிக்கச் செய்கிறது.