TNPSC Thervupettagam

மாற்றியமைக்கப்பட்ட உதான் திட்டம் 2026

March 28 , 2026 3 days 67 0
  • பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்துவதற்காக 'மாற்றியமைக்கப்பட்ட உதான்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம் சிறிய நகரங்களில் உள்ள சாமானிய மக்களும் விமானப் பயணத்தை மலிவாகவும் எளிதாகவும் மேற்கொள்ளும் நோக்கம் கொண்டது.
  • இத்திட்டம் 2026-27 முதல் 2035-36 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளுக்குச் செயல் படுத்தப் படும், இதற்காக ₹28,840 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பயன்படுத்தப்படாத ஓடுதளங்களைக் கொண்டு 100 புதிய விமான நிலையங்களை மேம்படுத்தவும், தொலைதூர மற்றும் கிராமப்புற இணைப்புகளை அதிகரிக்கவும் இது இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • சுமார் 441 விமான நிலையங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பிற்கும் (O&M), 200 ஹெலிபேடுகளை அமைப்பதற்கும் நிதி உதவி வழங்கப்படும்.
  • லாபம் குறைவாக உள்ள வழித்தடங்களில் விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு ₹10,043 கோடி அளவிலான செயல்சாத்திய இடைவெளி நிதி (VGF) ஆதரவு வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்