TNPSC Thervupettagam

மாற்றியமைக்கப்பட்ட உதான் திட்டம்

July 8 , 2026 16 hrs 0 min 15 0
  • 2026-27 முதல் 2035-36 ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்கு ₹28,840 கோடி மதிப்பீட்டில் மாற்றியமைக்கப்பட்ட உதான் (Ude Desh ka Aam Nagrik - UDAN) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • தற்போதுள்ள 100 விமான ஓடுதளங்களை உதான் விமான நிலையங்களாக மேம்படுத்துவதன் மூலம் பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளில் 200 நவீன ஹெலிபேடுகளை அமைப்பதற்கும் இது முன்மொழிகிறது.
  • பிராந்திய விமான இயக்கத்தை மேம்படுத்துவதற்காக, விமான நிறுவனங்களுக்கான சாத்தியக்கூறு இடைவெளி நிதியுதவி (VGF) ஆதரவானது 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • ஆத்மநிர்பார் பாரத் முன்னெடுப்பின் கீழ், HAL (Hindustan Aeronautics Limited) துருவ் மற்றும் டோர்னியர் விமானங்கள் உட்பட உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் பயன்பாட்டை இத்திட்டம் ஊக்குவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்