மாற்றியமைக்கப்பட்ட எத்தனால் தயாரிப்பு வட்டி மானியத் திட்டம்
March 12 , 2025 539 days 380 0
மத்திய உணவு அமைச்சகம் ஆனது, மாற்றியமைக்கப்பட்ட எத்தனால் தயாரிப்பு வட்டி மானியத் திட்டத்தினை அறிவித்துள்ளது.
இது ஓராண்டு கால அவகாசம் உட்பட ஐந்து ஆண்டுகளுக்கு, ஆண்டிற்கு 6 சதவீதம் அல்லது வங்கி வட்டி விகிதங்களில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவாக இருக்கிறதோ அந்த வட்டி மானியங்களை வழங்கும்.
இந்த நடவடிக்கையானது, அரசாங்கத்தின் பெட்ரோல் எத்தனால் கலப்பு (EBP) என்ற திட்டத்தினை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் ஆண்டு முழுவதும் செயல்படுவதை மிக நன்கு உறுதி செய்வதற்காக என்று, அவற்றின் தற்போதைய எத்தனால் ஆலைகளை புதிய மாற்றி அமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் மற்றும் DFG போன்ற சில தானியங்களைப் பயன்படுத்த வேண்டி பல் ஊட்டப் பொருட்கள் அடிப்படையிலான ஆலைகளாக மாற்ற இயலும்.