TNPSC Thervupettagam

மாற்றீடு பயிர் முறை

April 9 , 2024 38 days 120 0
  • நெல் பயிரிடப்பட்ட தரிசு அல்லது நெல் அறுவடைக்குப் பின்னதாக பயிர் செய்யப் படாத நிலம் ஆனது கிழக்கு இந்தியாவில் ஒரு முக்கிய வேளாண் பிரச்சினையாக உள்ளது.
  • இருப்பினும், நிலப்பரப்பிற்குப் பொருந்துவதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட வேளாண்மையுடன் கூடிய பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் பயிர்களை அறிமுகப் படுத்துவது அதை ஒரு வாய்ப்பாக மாற்ற உதவுகிறது.
  • இது பண்ணை வருமானத்திற்கும் உதவச் செய்வதோடு, உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
  • ஒடிசா மாநிலத்தின் கடலோரப் பகுதிகள் இந்த மாற்றீடு பயிர் முறையை மேற் கொள்கின்றன.
  • பயறு வகை பயிர்கள் ஆனது, அறுவடைக்கு முன்னதாக அறுவடைக்குத் தயாராக உள்ள நெல் வயல்களில் கிடைக்கக் கூடிய ஈரப்பதத்தைப் பயன்படுத்தி, குறைந்தபட்ச தலையீடு மற்றும் செலவுடன் விதைக்கப்படுகின்றன.
  • இத் திட்டத்தின் கீழ் பச்சைப்பயறு, உளுந்து, கடலைப்பருப்பு, கடுகு உள்ளிட்ட எட்டுப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
  • இந்த மாநிலத்தில் 6.18 மில்லியன் ஹெக்டேருக்கு மேலான பரப்பளவிலான பயிர் நிலங்கள் உள்ளன என்ற நிலையில் இது 10 வேளாண் பருவநிலை மண்டலங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்