மாற்றுத் திறனாளி நபர்களின் உரிமைகள் தொடர்பான விதிகள் 2024 (திருத்தம்)
October 28 , 2024 303 days 254 0
மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் (RPwD) தொடர்பான விதிகளில் பல்வேறு புதியத் திருத்தங்களை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது.
மாற்றுத் திறனாளிச் சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட மாற்றுத் திறனாளி அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பச் செயல்முறையை ஒழுங்குமுறைப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது அணுகல் தன்மையை மேம்படுத்தச் செய்வதோடு மாற்றுத் திறனாளிகளுக்கு என்று சேவைகளைத் திறம்பட வழங்கும்.
இனி, குறிப்பிட்ட குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி நபர்கள் UDID இணைய தளம் மூலம் மாற்றுத் திறனாளி சான்றிதழ்கள் மற்றும் UDID அட்டைகளுக்கு என்று இதில் விண்ணப்பிக்கலாம்.
குறைபாடுகளின் பல்வேறு நிலைகளைக் குறிக்கும் வண்ணக் குறியிடப்பட்ட UDID அட்டைகளையும் இந்தத் திருத்தங்கள் அறிமுகப்படுத்துகின்றன:
40 சதவீதத்திற்கும் குறைவான குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு வெள்ளை நிற அட்டை,
40-79 சதவீதம் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு மஞ்சள் நிற அட்டை மற்றும்
80 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுடையவர்களுக்கு நீலநிற அட்டை.
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைகளில் 4% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
ஆனால் தலாசீமியா, இரத்தம் உறையாமை நோய் (ஹீமோபிலியா) மற்றும் அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் போன்ற இரத்தக் கோளாறுகள் உள்ளவர்கள் PwD பிரிவின் கீழ் வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடுகளைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்கள் ஆவர்.