மாற்றுத் திறனாளிகளுக்கான 23வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2025
February 5 , 2025 150 days 239 0
23வது மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான (2025) அதிகாரப்பூர்வ முத்திரைச் சின்னம் மற்றும் உருவச்சின்னம் ஆகியவை சென்னையில் வெளியிடப் பட்டன.
இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1,700க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி தடகள வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) ஆனது, தமிழ்நாடு மாற்றுத் திறனாளி விளையாட்டுப் போட்டிகள் சங்கத்துடன் இணைந்து இப்போட்டிகளுக்கான ஆதரவினை அளிக்கிறது.