மாற்றுத் திறனாளிகளுக்கான 4வது தேசிய பேட்மிண்டன் சாம்பியன்சிப்
December 31 , 2021 1314 days 597 0
மாற்றுத் திறனாளிகளுக்கான 4வது தேசிய பேட்மிண்டன் சாம்பியன்சிப் போட்டியில் நிதேஷ்குமார் இரட்டைத் தங்கம் வென்றார்.
இந்த சாம்பியன்சிப் போட்டியானது ஒடிசாவின் புவனேஷ்வர் நகரில் நடத்தப் பட்டது.
ஹரியானாவின் நிதேஷ் தனது சக வீரரான தருண் தில்லனுடன் இணைந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற, உலகின் முன்னணி ஜோடியான பிரமோத் பகத் மற்றும் மனோஜ் சர்கார் ஆகியோரை ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
இதற்கு முன்பாக நிதேஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் தங்கம் வென்றார்.