மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 2025
March 31 , 2025 295 days 487 0
மாற்றுத் திறனாளிகளுக்கான இரண்டாவது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தர வரிசையில் 34 தங்கப் பதக்கங்களுடன் ஹரியானா அணியானது மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஹரியானா மாநில அணியானது மொத்தம் 104 பதக்கங்களுடன் (34 தங்கம், 39 வெள்ளி மற்றும் 31 வெண்கலம்) மீண்டும் பதக்கப் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளது.
தமிழ்நாடு மாநில அணியானது 74 பதக்கங்களுடன் (28 தங்கம், 19 வெள்ளி மற்றும் 27 வெண்கலம்) இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கடந்த முறை இரண்டாவது இடத்தைப் பிடித்த உத்தரப் பிரதேச மாநில அணியானது, 64 பதக்கங்களுடன் (23 தங்கம், 21 வெள்ளி மற்றும் 20 வெண்கலம்) இந்த முறை இதில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.