மாற்றுத் திறனாளிகளுக்கான சுகாதார சம பங்கு குறித்த உலக அறிக்கை
December 15 , 2022 1044 days 570 0
மாற்றுத் திறனாளிகளுக்கான சுகாதார சமபங்கு குறித்த உலகளாவிய அறிக்கை ஒன்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது.
மாற்றுத் திறனாளிகளுக்கு, சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் ஒப்பிடும் போது, அகால மரணம் மற்றும் நோய்க்கு உள்ளாகும் அபாயம் அதிகமாகும்.
முறையான மற்றும் தொடர்ச்சியான சுகாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, அவர்கள் குறைபாடுகள் இல்லாதவர்களை விட 20 ஆண்டுகளுக்கு முன்பே இறக்கும் அபாயம் அதிகமாகும்.
ஆஸ்துமா, மனச்சோர்வு, நீரிழிவு, உடல் பருமன், வாய்வழி நோய்கள் மற்றும் பக்க வாதம் போன்ற நாட்பட்ட நோய்கள் உருவாகக் கூடிய அபாயம் இவர்களில் இருமடங்கு அதிகமாகும்.
தற்போது, உலகம் முழுவதும் உள்ள ஆறில் ஒருவருக்கு (1.3 பில்லியன்) குறிப்பிடத்தக்க வகையிலான குறைபாடுகள் உள்ளன.