மாற்றுத் திறனாளிகளுக்கான படகுப் பந்தய உலகக் கோப்பைப் போட்டி - மகளிருக்கான 200 மீட்டர் படகுப் பந்தயம்
June 2 , 2022 1163 days 568 0
மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி நாயகி பிரச்சி யாதவ், உலகக் கோப்பைப் பதக்கத்தினை வென்ற முதல் இந்தியப் படகோட்டும் வீராங்கனை என்ற வரலாற்றினைப் படைத்தார்.
போலந்தின் போஸ்னான் நகரில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான படகுப் பந்தய உலகக் கோப்பைப் போட்டியில் VL2 மகளிருக்கான 200 மீட்டர் பந்தயத்தில் வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.
கடந்த ஆண்டு டோக்கியோ நகரில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று, இறுதிப் போட்டி வரை சென்ற முதல் இந்திய வீராங்கனை பிரச்சி ஆவார்.