முதல்முறையாக சாலைப் போக்குவரத்து அமைச்சகமானது பேருந்துகள் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்காக மாற்றுத் திறனாளிகளுக்குச் சாதகமான அம்சங்கள் கட்டாயம் என்ற வகையில் ஒரு வரைவு விதியை வெளியிட்டு இருக்கின்றது.
13 இருக்கைகளுக்கும் அதிகமான இருக்கைகளைக் கொண்ட பேருந்துகளானது மாற்றுத்திறன் கொண்ட நபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் சக்கர நாற்காலிக்கான சரிவு தளம், அதனைப் பூட்டும் வசதி மற்றும் இதரக் கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும்.