யுனெஸ்கோ மற்றும் டாட்டா சமூக அறிவியல் நிறுவனம் ஆகிய இரண்டும் இணைந்து “2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் கல்வி நிலை குறித்த அறிக்கை: மாற்றுத் திறனுடன் இருக்கும் குழந்தைகள்” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இது 2011 ஆம் ஆண்டில் மக்கட் தொகைத் தகவலை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. இது நாட்டில் 5 முதல் 19 வயது வரை 78 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனுடன் குழந்தைகள் இருப்பதை காண்பிக்கின்றது.
மேலும் இது இந்தியாவில் மாற்றுத் திறனுடன் இருக்கும் 27 சதவிகிதக் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றதே இல்லை என்று கூறுகின்றது.
இந்த அறிக்கை கல்வி உரிமைச் சட்டம், 2009 என்பதை மாற்றுத் திறனாளிகளின் உரிமைச் சட்டம் 2016 உடன் ஒன்றிப் பொருந்துவதற்காக திருத்தம் செய்ய பரிந்துரைக்கின்றது.