மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தலுக்கான 2023 ஆம் ஆண்டு தேசிய விருதுகள்
December 5 , 2023 605 days 287 0
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், 2023 ஆம் ஆண்டு சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று (டிசம்பர் 3) 21 தனிநபர்கள் மற்றும் 9 நிறுவனங்களுக்கு இந்த தேசிய விருதுகளை வழங்கினார்.
அவர் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை உள்ளடக்கம் மற்றும் ஒத்துணர்வின் அடையாளமாக அடையாளப்படுத்தும் வகையில் அது அணுகத் தக்கதாக உள்ளதாக அறிவித்தார்.
அமேசான் இந்தியா நிறுவனமானது இந்த மதிப்பு மிக்க தேசிய விருதை வென்றுள்ளது.
தீபா மல்லிக் மற்றும் ஷீத்தல் தேவி ஆகியோரின் சிறப்பான சாதனைகளுக்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஷீத்தல் தேவி, தனது 16 வயதில், இந்த ஆண்டு ஆசிய மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில், இரண்டு தங்கம் உட்பட மூன்று பதக்கங்களைப் பெற்று, மாற்றுத் திறனாளி பெண்களின் மகத்தான திறனை வெளிப்படுத்தினார்.