இந்தியத் தேர்தலுக்குப் பின்பு பிரதமர் மோடி மாலத் தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
அவருக்கு இலங்கை அதிபர் மைத்திரி பாலா சிறிசேனாவால் “சமாதி புத்தர் சிலை” ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது.
சமாதி புத்தர் என்பது இலங்கையின் அனுராதாபுராவில் உள்ள மகாமிநவா பூங்காவில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும்.
ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்பு இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் முதல் சர்வதேசத் தலைவர் மோடி ஆவார்.
இவர் மாலத்தீவு அதிபர் முகமது சோலிக்குடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற முக்கியப் பகுதிகள் உள்பட 6 இருநாட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
பிரதமர் மோடிக்கு மாலத் தீவின் உயரிய விருதான “நிசான் இசுதீனின் ஆட்சியாளர்” என்ற விருது வழங்கப்பட்டது.
மேலும் அவர் மாலத் தீவின் நாடாளுமன்றமான மஜ்லிஸில் உரையாற்றினார்.
மேலும் மாலத் தீவைச் சேர்ந்த குடிமைப் பணி அதிகாரிகளுக்குப் பயிற்சி வழங்கவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.