விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படையின் கப்பல் பட்டறையில் மாலத்தீவின் கடலோரக் காவல் படையின் (MCGS - Maldivian Coast Guard Ship) கப்பலான ஹுராவீயின் மறுசீரமைப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டு இந்திய கடற்படையால் முறையாக அவர்களிடம் அது ஒப்படைக்கப் பட்டது.
இது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR - Indian Ocean Region) உள்ள நட்பு நாடுகளின் கடற்படைகளோடு இராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் முன்முயற்சியாக எடுக்கப் பட்டது.
இந்த கப்பலானது முதலில் மார்ச் 2001ல் கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர் மற்றும் இஞ்சினியர்ஸ் என்ற நிறுவனத்தால் டிரிங்கட் வகுப்பு ரோந்து கப்பலாக கட்டப்பட்டு INS திலன்சங்க் என்ற பெயரில் முதல்முறையாக செயல்முறைப் படுத்தப்பட்டது.
பின்னர் ஏப்ரல் 2006-ல் இந்திய அரசால் அது மாலத்தீவிற்குப் பரிசாக அளிக்கப்பட்டது.