தாயிடமிருந்து குழந்தைக்கு ஹெபடைடிஸ் B தொற்று பரவுவதை (EMTCT) நீக்கியதற்காக மாலத்தீவினை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.
மாலத்தீவுகள் உலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட மூன்று நோய்களின் ஒழிப்பை நிறைவு செய்து 2019 ஆம் ஆண்டில் HIV மற்றும் சிபிலிஸின் EMTCT தொற்று நீக்கத்திற்கான WHO அங்கீகாரத்தினை ஏற்கனவே பெற்றிருந்தன.
மாலத்தீவில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பைப் பெறுகிறார்கள் மற்றும் எச்.ஐ.வி, சிபிலிஸ் மற்றும் ஹெபடைடிஸ் B ஆகிய தொற்றுகள் உள்ளனவா என்று பரிசோதிக்கப்படுகிறார்கள்.
நாட்டில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகள் சரியான நேரத்தில் பிறப்பின் போதான ஹெபடைடிஸ் B தொற்றுத் தடுப்பூசித் தவணைகள் மற்றும் முழு தடுப்பூசி பாதுகாப்பைப் பெறுகிறார்கள்.
அந்நாட்டில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் எச்.ஐ.வி அல்லது சிபிலிஸுடன் எந்த குழந்தைகளும் பிறக்கவில்லை என்பதோடு மேலும் 2023 ஆம் ஆண்டின் தேசியக் கணக்கெடுப்பில் பள்ளி செல்லும் வயதிலான குழந்தைகளிடையே ஹெபடைடிஸ் B தொற்று சுழியாகக் கண்டறியப்பட்டது.