மாலி நாட்டின் அதிபர், பிரதமர் மற்றும் தற்காலிக அரசின் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை மாலியின் இராணுவ அதிகாரிகள் கைது செய்தனர்.
மாலியின் அதிபர் பா நடாவ், பிரதமர் மோக்டர் ஒவானே மற்றும் தற்காலிக அரசின் பாதுகாப்பு அமைச்சரான சௌலிமேனே பெடசௌர் ஆகியோர் அந்நாட்டின் தலைநகரான பமாகோவிற்கு வெளியே கதி என்னுமிடத்தில் கைது செய்யப்பட்டனர்.
அரசாங்கத்தின் ஒரு மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது இரண்டு இராணுவ அதிகாரிகள் தங்கள் பதவியை இழந்ததையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.