TNPSC Thervupettagam

மாலே இணைப்புத் திட்டம்

August 29 , 2021 1479 days 640 0
  • மாலத்தீவு அரசானது மாலே இணைப்புத் திட்டத்தைக் கட்டமைப்பதற்காக AFCONS எனப்படும் ஒரு மும்பை நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • இந்த உள்கட்டமைப்புத் திட்டமானது மாலத்தீவில் இந்தியாவினால் மேற்கொள்ளப் படும் மிகப்பெரிய ஒரு திட்டமாகும்.
  • இதில் வில்லிங்லி, குல்ஹிஃபல்ஹீ மற்றும் திலாஃபுசி (Villingli, Gulhifalhu and Thilafushi) போன்ற அண்டைத் தீவுகளுடன் மாலத்தீவின் தலைநகர் மாலேயை இணைக்கும் கரைப்பால இணைப்பு மற்றும் 6.74கி.மீ. பாலமானது கட்டமைக்கப்படும்.
  • 400 மில்லியன் டாலர் கடன் சார்பு தொடர் வரிசையில் (line of credit) 100 மில்லியன் டாலர் மானியத்தில் இந்தியா இத்திட்டத்திற்கு நிதி வழங்கி வருகிறது.
  • கடன் சார்பு தொடர் என்பது மானியம் அல்ல, ஆனால் வளர்ந்து வரும் நாடுகளுக்கு சலுகை வட்டி வீதத்தில் வழங்கப்படும் வகையில் கடன் பெறும் அரசு திருப்பிச் செலுத்த வேண்டிய ஒரு குறைந்த வட்டி கடன்ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்