January 6 , 2026
2 days
70
- தமிழ்நாடு மாநில அரசானது, மாவட்ட கனிம அறக்கட்டளை (DMF) விதிகளைத் திருத்தி அமைத்துள்ளது.
- 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட கனிம அறக்கட்டளை விதிகள், 2017 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட முந்தைய விதிகளுக்கு மாற்றாக அமைகிறது.
- சுரங்கத்தினால் பாதிக்கப்பட்டப் பகுதிகள் மற்றும் சமூகங்களுக்கு DMF நிதிகளின் பயன்பாட்டை மேம்படுத்துவதே இந்தத் திருத்தத்தின் நோக்கமாகும்.
- புதிய விதிகளின் கீழ், சுரங்கக் குத்தகைதாரர்கள் விதி மீறல்களுக்கு வட்டியுடன் DMF பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.
- DMF நிதியில் குறைந்தபட்சம் 70% ஆனது நேரடியாக பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்காக செலவிடப்பட வேண்டும்.
- மாவட்ட கனிம அறக்கட்டளையின் தலைவராக மாவட்ட ஆட்சியர் செயல்படுவார்.
Post Views:
70