மத்திய அரசானது மாவட்ட சுரங்க நிதி திட்டத்தின் கீழ் செலவிடும் படி மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
பிரதம மந்திரியின் கனிஜ் ஷேத்ரா கல்யாண் திட்டத்தின் (Pradhan Mantri Khanij Kshetra Kalyan Yojana-PMKKKY) கீழ் வசூலிக்கப்பட்ட 23,606 கோடி ரூபாயில் 24 சதவீதம் மட்டுமே உண்மையில் செலவிடப்பட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
PMKKKY ஆனது சுரங்க நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் வருவாயின் ஒருபகுதி (தாதுக்களிலிருந்து பெறப்படும் உரிமைத் தொகையில் 10-30%) சுரங்க பகுதிகளின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கென ஒதுக்கீடு செய்யப்படுகிறது.