TNPSC Thervupettagam

மாவட்ட தலைமையிலான ஜவுளித்துறைப் பரிமாற்ற (DLTT) முன்னெடுப்பு

January 16 , 2026 6 days 54 0
  • கௌகாத்தியில் நடைபெற்ற தேசிய ஜவுளி அமைச்சர்கள் மாநாட்டில் ஜவுளித் துறை அமைச்சகம் ஆனது மாவட்ட தலைமையிலான ஜவுளித்துறைப் பரிமாற்ற (DLTT) முன்னேடுப்பினைத் தொடங்கியது.
  • இந்தத் திட்டம் ஜவுளித் துறையில், ஏற்றுமதியில் சுமார் 100 உலகளாவிய சாம்பியன் மாவட்டங்களையும் 100 இலட்சிய நோக்க மிக்க மாவட்டங்களையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஏற்றுமதி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் (MSME) மற்றும் பணியாளர் வளம் பற்றிய தரவுகளைப் பயன்படுத்தி இந்த மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன.
  • மேம்பட்ட வளர்ச்சிக்காக சாம்பியன் மாவட்டங்களில் தொழில்துறை 4.0 தொழில் நுட்பம் மற்றும் மாபெரும் பொது வசதி மையங்கள் நிறுவப்பட உள்ளன.
  • இலட்சிய நோக்க மிக்க மாவட்டங்கள் திறன் பயிற்சி, மூலப்பொருள் வங்கிகள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான (SHGs) ஆதரவைப் பெறும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்