மாவட்ட தலைமையிலான ஜவுளித்துறைப் பரிமாற்ற (DLTT) முன்னெடுப்பு
January 16 , 2026 230 days 236 0
கௌகாத்தியில் நடைபெற்ற தேசிய ஜவுளி அமைச்சர்கள் மாநாட்டில் ஜவுளித் துறை அமைச்சகம் ஆனது மாவட்ட தலைமையிலான ஜவுளித்துறைப் பரிமாற்ற (DLTT) முன்னேடுப்பினைத் தொடங்கியது.
இந்தத் திட்டம் ஜவுளித் துறையில், ஏற்றுமதியில் சுமார் 100 உலகளாவிய சாம்பியன் மாவட்டங்களையும் 100 இலட்சிய நோக்க மிக்க மாவட்டங்களையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஏற்றுமதி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் (MSME) மற்றும் பணியாளர் வளம் பற்றிய தரவுகளைப் பயன்படுத்தி இந்த மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன.
மேம்பட்ட வளர்ச்சிக்காக சாம்பியன் மாவட்டங்களில் தொழில்துறை 4.0 தொழில் நுட்பம் மற்றும் மாபெரும் பொது வசதி மையங்கள் நிறுவப்பட உள்ளன.
இலட்சிய நோக்க மிக்க மாவட்டங்கள் திறன் பயிற்சி, மூலப்பொருள் வங்கிகள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான (SHGs) ஆதரவைப் பெறும்.