உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வானது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.
இந்த வழக்கானது மாவட்ட நீதிபதிகளை நியமிப்பதை நிர்வகிக்கின்ற அரசியலமைப்பின் 233வது சரத்தினைப் பற்றியது.
233(2) வது சரத்து குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் பணியில் இருந்தும் நீதிச் சேவை ஆற்றாத வழக்கறிஞர்களை மட்டுமே மாவட்ட நீதிபதிகளாக நியமிக்க அனுமதிக்கிறது.
முன்பு வழக்கறிஞர் மன்றப் பணி அனுபவம் பெற்ற ஒரு நீதித்துறை அதிகாரி, வழக்கறிஞர் மன்ற ஒதுக்கீட்டின் கீழ் தகுதி பெறுகிறாரா என்பதை நீதிமன்றம் ஆராயும்.
இது துணை நீதித்துறைக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான 234 என்ற சரத்திலிருந்து வேறுபட்டது.
ஏழு ஆண்டுகள் வழக்கறிஞர் பணி அனுபவம் கொண்ட நீதித்துறை அதிகாரிகள், வழக்கறிஞர் மன்ற ஒதுக்கீட்டின் கீழ் தகுதி பெறுகிறார்களா என்பது தான் கேள்விக்கு உள்ளானதாகும்.
மாவட்ட நீதிபதி ஒருவர் பணியாற்றி வருவதால், அவரது நியமனத்தை ரத்து செய்த கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து இந்த வழக்கு எழுந்தது.
2021 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இந்த விவகாரமானது அதிகாரப்பூர்வமான விளக்கத்திற்காக ஒரு ஈராய அமர்வினால் அரசியலமைப்பு அமர்விற்குப் பரிந்துரைக்கப்பட்டது.