TNPSC Thervupettagam

மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள்

November 21 , 2025 16 hrs 0 min 12 0
  • தேசிய நீதித்துறை தரவுக் கட்டமைப்பின் (NJDG) படி, மாவட்ட நீதிமன்றங்களில் 4.69 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  • இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஒரு அரசியலமைப்பு அமர்வு, கீழமை  நீதிமன்றங்களின் தேக்க நிலையினை நீடித்த வழக்குகள் மற்றும் அதிகரித்து வரும் நிலுவைத் தன்மையுடன் இணைத்தது.
  • அடிப்படை அறிவு இல்லாததால் டெல்லியில் உள்ள நீதிபதிகள் பயிற்சி பெற உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு உத்தரவிட்டது.
  • துணை நீதிபதிகள் சம்மன் அனுப்புதல் மற்றும் தினசரி வழக்குப் பட்டியல்களை விசாரித்தல் போன்ற எழுத்தர் பணிகளில் மிக நீண்ட நேரம் செலவிடுவதால், வழக்குத் தீர்ப்பதற்கான நேரம் குறைகிறது.
  • வணிக நீதிமன்றச் சட்டத்தின் 12(a)வது பிரிவின் கீழ் கட்டாயமான முன்வழக்கு மத்தியஸ்தம் மற்றும் சில பிற நடைமுறைத் தேவைகள் தாமதங்களுக்குப் பங்களித்து உள்ளன.
  • உரிமையியல் நடைமுறைச் சட்டத்தில் உள்ள சிக்கலான விதிகள் மற்றும் நீண்ட செயல்படுத்தல் நடவடிக்கைகள் ஆகியன உரிமையியல் வழக்குகளை முடிப்பதன் வேகத்தினைத் தொடர்ந்து குறைக்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்